பப்பாளியில் பால் எடுத்தல்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள கோ.2 மற்றும் கோ.5 இரகங்கள் பால் எடுப்பதற்கு உகந்தவை. இதில் கோ.2 என்ற இரகத்திலிருந்து கிடைக்கும் பாலில், அதிக நொதித்திறன் அடங்கியுள்ளது. எனவே பால் எடுக்க கோ.2 இரகம் சிறந்தது. பால் எடுத்த பிறகு இந்த இரகங்களில் பழங்களை உண்ண உபயோகப்படுத்தலாம். முதிர்ந்த காய்களில் இருந்து பால் சேகரிக்கவேண்டும். காய்களின் மேல் இரண்டு மதல் மூன்று மில்லி மீட்டர் ஆழத்திற்கு நான்கு இடங்களில் நீளவாட்டில் கீறல் ஏற்படுத்தவேண்டும். இவ்வாறு சீறிவிடுவதற்கு கூரிய பிளேடு, கூரான மூங்கில் தண்டு அல்லது துர ஏறாத கத்தியை உபயோகப்படுத்தவேண்டும். கீறல்களிலிருந்து வடியும் பாலை அலுமினியத் தட்டு, ரெக்சின் அல்லது பாலித்தீன் தாள்கிளல் சேகரிக்கவேண்டும். காய்களிலிருந்து பால் சேகரிப்பு அதிகாலையிலிருந்து காலை பத்து மணிக்குள் செய்து முடிக்கவேண்டும். மூன்று அல்லது நான்கு நாட்கள் இடைவெளிவிட்டு முன்பு பாலெடுத்த அதே காய்களில் மறுபடியும் பால் சேகரிக்கலாம். இவ்வாறு எடுத்த பாலை, சூரிய ஒளியிலோ அல்லது 40 டிகிரி சென்டிகிரேடு உஷ்ணத்தில் செயற்கையான உலர் கருவிகளிலோ உலர்த்தவேண்டும். உலர்த்த தாமதம் ஏற்பட்டால் தரம் பாதிக்கப்படும். “பொட்டாசியம் மெடாபைசல்பைட்” என்ற இராசயனத்தை 0.05 சதம் என்ற அளவில் பாலுடன் சேர்த்தால் பாலில் உள்ள ப்பபெயின் என்ற நொதிப் பொருள் சேதாரம் அடைவதைத் தவிர்க்கலாம். பின் இவற்றை பாலித்தீன் பைகளில் அடைத்து விற்பனைக்கு அனுப்பலாம்.
பால் மகசூலானது இரகம், பால் எடுக்கும் பருவம், மரங்களின் செழிப்பு மற்றும் சாகுபடி செய்யப்படும் பகுதி போன்ற காரணங்களைச் சார்ந்து இருக்கும். ஒரு எக்டரிலிருந்து சுமார் 3000 முதல் 3750 கிலோ வரை பால் எடுக்கலாம்.
பால் எடுக்கப்பட்ட பப்பாளி காய்களை அறவடை செய்து டூடிஃபுரூட்டி எனப்படும் பேக்கரி (அ) அடுமானப் பொருள் தயார் செய்ய பயன்படுத்தலாம்.
கோ.2 - 600 கிலோ / எக்டர்
கோ.5 - 800 கிலோ / எக்டர்


No comments:

Post a Comment