கோழி நோய்ப் பராமரிப்பு

கோழி நோய்ப் பராமரிப்பு

வைரஸால் பரவும் நோய்கள்

ராணிக்கட்
 / வெள்ளைக்கழிச்சல் நோய்:

முறையான தடுப்பூசி மற்றும் பண்ணையை சுத்தமாகப் பராமரித்தல் மூலம் நோய் வராமல்  தடுக்கலாம். பிற மனிதர்கள் உள்ளே வராமல் தடுத்தால் ஆழ்கூள முறையில் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம். மேலும் இறந்த கோழிகளின் உடலை உடனே அப்புறப்படுத்தி புதைத்து விடுதல் நன்று. அப்போது  தான் அவற்றை உண்ண வரும் காக்கைகள், கழுகு போன்றவற்றிலிருந்து பண்ணையைப் பாதுகாக்க முடியும். இருவகைத் தடுப்பூசிகள் இந்தியாவில் பின்பற்றப்படுகின்றன. ஒன்று குஞ்சுகளிலும் மற்றொன்று வயதான கோழிகளிலும் போடப்படுகிறது. இத்தடுப்பூசி இந்தியக் கால்நடை ஆராய்ச்சி நிலையத்தில் தயாரிக்கப்பட்டது. 6 வார வயதான குஞ்சுகளுக்குப் போடப்படும் தடுப்பூசியானது 1லிருந்து 3 வருடங்கள் வரை நோய் எதிர்ப்புச் சக்தி கொடுக்கும். அதிகமான குடற்புழுக்கள் மற்றும் இரத்தக் கழிச்சல் நோயால் பாதிக்கப்பட்ட கோழிகளுக்கு தடுப்பு மருந்துகள் பயனளிக்கிறது. முக்தேஸ்வர் என்ற தடுப்பு மருந்து அதிகம் கொடுத்தல் கூடாது. அம்மருந்து உறுப்புக்களைப் பாதித்து சில சமயங்களில் பறவைகளில் பக்கவாதத்தினை ஏற்படுத்துகிறது. இரத்தக் கழிச்சல், சரியான ஊட்டச்சத்தற்ற, குடற்புழு, பாதிப்புக் கொண்ட கோழிகள் எளிதில் இந்நோய்க்கு உட்படுகிறது.


வயதுநோய்தடுப்பு மருந்துசெலுத்தும் வழி
முதல் நாள்மாரெக்ஸ்ஹச்.வீ.டி மருந்துதோலின் கீழ்
5-7 நாட்கள்ராணிக்கெட், எப் தடுப்பூசி / லசோட்டா எப்லசோட்டா எப்கண்ணில் (சொட்டு மருந்து)
10-14 நாட்கள்ஐபிடிஉயிருள்ள இன்டர் மீடியம் ஐபிடிகுடிதண்ணீர் மூலம்
24-28 நாட்கள்ஐபிடிஉயிருள்ள இன்டர் மீடியம் ஐபிடி தடுப்பூசிகுடிதண்ணீர் மூலம்
8வது வாரம்இராணிக்கெட் நோய்இராணிக்கெட் ஆர்டிவிகே / ஆர் டுபி தடுப்பூசிஇறக்கையில் தோலின் கீழ்
15-18 நாட்களில்இராணிக்கெட் நோய்உயிருள்ள இராணிக்கெட் ஆர்டிவிகே / ஆர்டுபி தடுப்பூசி / உயிரற்ற இராணிக்கெட் தடுப்பூசிஇறக்கையில் தோலின் கீழ்

குடற்புழு நீக்கம் செய்தல்
ஆர்டுபி / ஆர்டிவிகே தடுப்பு மருந்து கொடுப்பதற்கு ஒரு வாரம் முன்பிருந்தே குடற்புழு நீக்க மருந்து அளிக்கவேண்டும். பின்பு 3 வார இடைவெளியில் 18வது வாரத்தில் 4 முறை குடற்புழு நீக்க மருந்து கொடுக்கப்பட்டிருக்கவேண்டும். உருளைப் புழுக்களுக்கு எதிராக பைப்பரசின் பொருட்கள், ஆல்பென்ஸோல், மெபென்ட்சோல் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். அதே போல் நிக்ளோசமைடு, பிராசிகுவின்டால், ஆல்பென்டசோல் போன்றவை நாடாப்புழுக்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுகின்றன.
குடற்புழு மருந்தை குடிநீர் வழியே கொடுக்கும் போது குறிப்பிட்ட அளவு மருந்தை குஞ்சுகள் 4 மணி நேரத்தில் குடிக்கும் நீர் அளவில் கலந்து கொடுக்கலாம். அதாவது 6 வார வயதுள்ள 100 குஞ்சுகளுக்கு ஒரு நாளைக்கு 6 லிட்டர் நீரில் கலந்து வைக்கலாம். மருந்து கலந்த நீரை முற்றிலுமாகக் கோழிகள் அருந்திய பிறகே மீண்டும் நீர் வைக்கவேண்டும்.

வெளிப்புற ஒட்டுண்ணிகள்
ஏதேனும் வெளிப்புற ஒட்டுண்ணிகள் இருப்பது கண்டறியப்பட்டால் உடனே, கொட்டகையை புகையூட்டம் செய்து, கோழிகளுக்கு மருந்து தூவுதல் வேண்டும்.

https://www.youtube.com/watch?v=lr7z19_SrW8


No comments:

Post a Comment